நஜீப்பின் சிறைவாசம்! அன்வாரின் தந்திர அரசியல்! – பாஸ் கருத்து!

- Sangeetha K Loganathan
- 18 May, 2025
மே 18,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak இப்போது சிறையில் இருப்பதற்கும் அரசு பொதுமன்னிப்பாகத் தண்டனை குறைக்கப்பட்டும் இன்னும் அவர் சிறையில் இருப்பதற்குப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahimமின் தந்திரமான அரசியல் நகர்வு தான் என பாஸ் கட்சியின் தகவல் தொடர்புக்குழு தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜீப் மீதான விசாரணை முழுமையடையாமல் அவருக்கானத் தண்டனை குறைப்பு அமலுக்கு வராது என்பதை உணர்ந்து அன்வார் திட்டமிட்டு முக்கிய நகர்வுகளை நகர்த்தி வருவதாகவும் Ahmad Fadhli Shaari குற்றம்சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக அன்வார் தெரிவித்தாலும் இப்போதும் அவர் ஊழல்வாதிகளுடன் தான் அரசியல் செய்து வருவதாகவும் ஊழல்வாதி என தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதால் நஜீப்பின் மூலமாகத் தனது திட்டங்களை நகர்த்தி வருவதாகவும் Ahmad Fadhli Shaari தெரிவித்தார். ஆனாலும் நஜீப் உட்பட முக்கிய தலைவர்களுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட முடியாமல் இருப்பதாக Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.
Ahmad Fadhli Shaari dari PAS menuduh Perdana Menteri Anwar Ibrahim menggunakan pemenjaraan Najib Razak sebagai strategi politik. Beliau mendakwa Anwar gagal bertindak tegas terhadap rasuah dan masih bekerjasama dengan individu terlibat rasuah demi kepentingan politiknya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *