மனைவியின் நிறுவனத்திற்குக் குத்தகை வழங்கிய அரசு அதிகாரி கைது!

top-news

மே 27,

அரசு நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட குத்தகையைத் தனது மனைவியின் நிறுவனத்திற்கு வழங்கிய மாநில உதவி இயக்குநர் ஓருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நெகிரி செம்பிலான் அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். சம்மந்தப்பட்ட அரசு அதிகாரி செகிரி செம்பிலான் மாநிலத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் உதவி இயக்குநரான 50 வயது Rosdi Pilus என தெரிய வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் சிரம்பானில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின் முக்கிய ஒப்பந்தத்தைத் தனது மனைவி நிறுவனத்திற்கு வழங்கியதையும் அதன் மதிப்பு RM19,990 என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து மீண்டும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மனைவியின் வங்கிக் கணக்கின் மூலமாக RM 5,000 மதிப்பிலான தொகையை லஞ்சமாகப் பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 2 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட 50 வயது அரசு அதிகாரிக்கு RM 5,000 ஜாமீன் வழங்கி நெகிரி செம்பிலான் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜூலை 7 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Seorang pegawai kanan kerajaan di Negeri Sembilan mengaku bersalah memberi kontrak kerajaan bernilai RM19,990 kepada syarikat isterinya dan menerima suapan RM5,000. Mahkamah membenarkan jaminan RM5,000 dan menetapkan 7 Julai untuk sebutan semula kes.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *