மோட்டார் சைக்கிள் விபத்தில் 15 வயது மாணவன் பலி!

- Sangeetha K Loganathan
- 22 May, 2025
மே 22,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை 1.30 மணியளவில் பெத்ரா ஜெயாவிலிருந்து Jalan Tun Haji Abdul Rahman Yaakub செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் விரைந்ததாகவும் கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார்.
அதிகாலையில் 15 வயது மாணவன் தனியாகச் சென்றிருப்பதாகவும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடமாட்டத்தை, குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில் ஈடுபடுபவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார்.
Seorang pelajar lelaki berusia 15 tahun maut selepas motosikal yang ditunggangnya hilang kawalan dan terbabas di Jalan Tun Haji Abdul Rahman Yaakub, Kuching. Polis menasihatkan ibu bapa agar memantau pergerakan anak-anak terutama pada waktu malam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *