பொருள்களை மலை போல வாகனத்தில் ஏற்றி சென்ற வாகனமோட்டி கைது!

- Sangeetha K Loganathan
- 20 May, 2025
மே 20,
சிவப்பு AXIA வானகம் பொருள்களை மலை போல வாகனத்தில் மேல் அடுக்கி வைத்து சாலையில் பயணிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்த்தப்பட்ட வாகனமோட்டியை ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிப்பதாக SEPANG மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார், அதிகமானப் பொருள்களை வாகனத்தில் ஏற்றி மற்ற வாகனங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சம்மந்தப்பட்ட 59 வயது வாகனமோட்டி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இச்சம்பவத்தால் எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை என இச்சம்பவத்தால் எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை என SEPANG மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் 59 வயது வாகனமோட்டிக்கு ஏற்பட்ட சாலை விபத்தால் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதைக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட 59 வயது உள்ளூர் ஆடவர் பாதுகாப்பாகக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் Norhizam Bahaman தெரிவித்தார். சம்மந்தப்பட்ட AXIA வாகனம் நிலை தடுமாறி எதிர் சாலையில் சென்றதாகவும் அதன்பின்னர் வாகனத்தின் மீது உள்ள பொருள்கள் சாலையில் சரிந்ததால் வாகனமோட்டி சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆடவரின் குடும்பத்தின் அரவணைப்பில் அவர் வாழ்ந்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang pemandu lelaki berusia 59 tahun ditahan selepas videonya memandu kereta AXIA dengan muatan berlebihan tular di media sosial. Dia dipercayai mengalami gangguan emosi selepas kemalangan, dan ditahan untuk siasatan lanjut oleh polis Sepang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *