ஆடவரை மோதி தப்பிய வாகனமோட்டி கைது! – கிள்ளான் காவல்துறை!

- Sangeetha K Loganathan
- 28 Apr, 2025
ஏப்ரல் 28,
ஆடவர் ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனமோட்டி ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தென்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவிய நிலையில் பாதிக்கப்பட்ட 50 வயது உள்ளூர் நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் விபத்தை ஏற்படுத்திய 37ன் வயது வாகனமோட்டியைக் காவல் துறை கைது செய்துள்ளதாகவும் Ramli Kasa தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் கிள்ளானில் உள்ள BANDAR SENTOSA’வில் நிகழ்ந்ததாகவும் கைது செய்யப்பட்ட 37 வயது வாகனமோட்டியின் மீது முன்னமே 4 குற்றங்கள் நிலுவையில் இருப்பதாகவும் Ramli Kasa தெரிவித்தார். 50வயது மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாக Ramli Kasa தெரிவித்தார்.
Seorang pemandu berusia 37 tahun ditahan selepas melanggar seorang lelaki berusia 50 tahun di Bandar Sentosa, Klang. Mangsa cedera parah dan dirawat di hospital, sementara suspek mempunyai empat rekod jenayah lampau.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *