பினாங்கில் நில அமிழ்வு! பள்ளி பேருந்து சிக்கியது!
- Sangeetha K Loganathan
- 16 Oct, 2024
அக்தோபர் 16,
இன்று காலை 8 மணியளவில் 3 மீட்டர் ஆழத்திற்குச் சாலையின் நடுவே ஏற்பட்ட நில அமிழ்வில் பள்ளி பேருந்து ஒன்று சிக்கியது. Bayan Lepas பகுதியில் உள்ள சாலையில் ஏற்பட்ட நில அமிழ்விற்கானக் காரணத்தை ஆராய சம்மந்தப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களைப் பள்ளியில் இறக்கி விட்டதற்குப் பின் பேருந்து நில அமிழ்வில் சிக்கியதாகப் பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார். நிலத்தடியில் உள்ள கழிவு நீர் குழாய் வெடித்ததால் இந்த குழி ஏற்பட்டதாக Pantai Jerejak சட்டமன்ற உறுப்பினர் Fahmi Zainol தெரிவித்தார். IWK நிலத்தடிக் குழாய்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் Indah Water Konsortium எனப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆணையம் இதனை முழுமையாக ஆய்வு செய்து சரிப்படுத்தும் என அவர் தெரிவித்தார்
Sinkhole sedalam 3meter muncul di Lebuh Bukit Kecil 3, Bayan Lepas, menyebabkan bas sekolah terperangkap. Dikatakan berpunca daripada paip IWK pecah. Kawasan itu telah ditutup untuk pembaikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *