பொது இடத்தில் மது அருந்தாதீர் என கண்டித்த பாதுகாவலர் குத்திக் கொலை!

- Sangeetha K Loganathan
- 26 May, 2025
மே 26,
தலைநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் குடியிருப்புப் பாதுகாவலர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு 9.23 மணியளவில் செந்தூலில் உள்ள Taman Intan Baiduri குடியிருப்புப் பகுதியில் கும்பல் ஒன்று பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற 3 நிமிடங்களில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சம்பவ இடத்தில் 44 வயது குடியிருப்புப் பாதுகாவலர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் செந்தூல் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் பாதுகாவலராகப் பணியாற்றும் 44 வயது ஆடவர் அன்றைய நாள் விடுமுறை என்பதால் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று திரும்பும் போது கும்பல் ஒன்று பொது இடத்தில் மது அருந்துவதைக் கண்டித்ததாகவும் கும்பலில் இருந்த சந்தேகநபர் பாதுகாவலரைக் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 44 வயது பாதுகாவலரின் உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட குடியிருப்புவாசிகள் விசாரணைக்கு உதவும்படியும் செந்தூல் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari கேட்டுக் கொண்டார்.
Seorang pengawal keselamatan berusia 44 tahun ditikam sehingga maut selepas menegur sekumpulan lelaki yang minum arak di kawasan awam di Sentul. Suspek dipercayai menikam mangsa dengan senjata tajam sebelum melarikan diri. Polis masih menyiasat
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *