போலி முதலீட்டில் RM720,800 ஆடவர்! – காவல்துறை விசாரணை

- Sangeetha K Loganathan
- 18 May, 2025
மே 18,
முகநூல் மூலமாகப் பெறப்பட்ட விளம்பரத்தை நம்பி தனது சேமிப்புப் பணத்தை முதலீடு செய்த 58 வயது வர்த்தகர் தாம் ஏமாற்றப்பட்டதாக நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Victor Genason இன்று தெரிவித்தார். கடந்த மார்ச் 25 முதல் சம்மந்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த வர்த்தகர் மே 9 முதல் எந்தவொரு தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
4 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 15 முறை RM730,500 ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளதாகவும் இதுவரையில் RM9,700 மட்டுமே திரும்பக் கிடைத்ததுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 58 வயது வர்த்தகர் தெரிவித்தார். நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளின் மீது 20க்கும் மேற்பட்ட முந்தைய குற்றப்பதிவுகள் இருப்பதை முதற்கட்ட விசாரணையில் காவல் துறை கண்டறிந்த நிலையில் சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Victor Genason தெரிவித்தார்.
Seorang peniaga berusia 58 tahun kerugian RM720,800 selepas melabur dalam skim pelaburan palsu melalui iklan Facebook. Polis mengesahkan akaun bank berkaitan mempunyai lebih 20 rekod jenayah dan kini telah dibekukan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *