அரசு வீடமைப்புத் திட்டத்தில் மோசடி! இரு பெண் அதிகாரிகள் கைது!

- Sangeetha K Loganathan
- 26 May, 2025
மே 26,
ஜொகூர் வாழ் குடிமக்களுக்கானப் புதிய வீடமைப்புத் திட்டமான Perumahan Rumah Impian Bangsa Johor (RIBJ) திட்டத்தின் மூலமாக இரு வெவ்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூல் செய்த 30 வயது அரசு அதிகாரியும் 42 வயது முன்னாள் கணக்கியல் நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் மீதான குற்றத்திற்கு மேலதிக விசார்ணைக் கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று ஜொகூர் Sesyen நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இரு பெண்களும் தலா RM 8,000 ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 2021 பிப்ரவரிலில் 48 வயது ஆடவரையும் அதே ஆண்டு 42 வயது மற்றொரு பெண்ணுக்கும் புதிய வீடமைப்புத் திட்டத்தின் மூலமாக வீடுகள் பெற்று தருவதாக நம்பிக்கை மோசடி செய்து சுமார் RM 24,000 வரையில் பணத்தை லஞ்சமாகப் பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட பெண்கள் இருவரின் மீதுமான விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் மேலதிக நீதிமன்ற விசாரணை ஜூன் 25 மேற்கொள்ளப்படும் என Sesyen நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
Dua wanita, seorang pegawai kerajaan dan bekas pengurus akaun, ditahan kerana menipu dua individu menerusi projek perumahan RIBJ dan mengaut RM24,000. Mereka dibebaskan dengan jaminan RM8,000 setiap seorang dan kes disambung 25 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *