10 ஆண்டுகளாகப் பேராக்கில் இந்திய மாணவர்களுக்கான 2000 ஏக்கர் நிலத்தை யார் நிர்வகிப்பது?

top-news
FREE WEBSITE AD

பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பளிக்களின் வளர்ச்சிக்காகவும் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நிதியைப் பெறவும் கடந்த 2008 ஆம் ஆண்டு 2000 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் வழங்கியது.

பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கும் A Sivanesan பேராக் மாநில இந்திய மாணவர்களின் கல்வி நிதியுதவிக்குச் சம்மந்தப்பட்ட Yayasan Pembangunan Pendidikan India NEGERI PERAK என்ன மாதிரியான நிதியுதவிகளை வழங்கியுள்ளது என்பதை அறிய வேண்டுவதாகவும் தற்போது Yayasan Pembangunan Pendidikan India NEGERI PERAK அறவாரியத்தின் தலைமை நிர்வாகிகள் யார் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கல்வி நிதி தொடர்பாக இந்திய மாணவர்கள் பலரும் தனது அலுவலகத்திற்கு வரும் நிலையில் தன்னால் இயன்றதையும் தாம் செய்து வருவதாகவும் ஆனால் இது முழுமையாக குறிப்பிட்ட அறவாரியம் செய்ய வேண்டியது என அவர் கடிந்தார். குறிப்பிட்ட அறவாரியத்தை நிர்வகிக்கும் இயக்குநர்கள் அவர்களின் அடையாளத்தையும் 2000 ஏக்கர் நிலத்தின் வரவுக் கணக்கறிக்கையையும் உடனே சமர்ப்பிக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

சம்மந்தப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தின் வாயிலாகப் பெறும் நிதியைக் கொண்டு பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும் பேராக் மாநில இந்தியர் மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டிய நிலையில் சம்மந்தப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க ஓர் வாரியம் தேவை என கடந்த 8 பிப்ரவரி 2013, Yayasan Pembangunan Pendidikan India NEGERI PERAK என ஓர் அறவாரியம் தோற்றுவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட அறவாரியத்தில் 9 தலைமை இயக்குநர்கள் கொண்ட குழு நிர்வகிக்கும் என்றும் சம்மந்தப்பட நிலம் தொடர்பான விவகாரங்களை Yayasan Pembangunan Pendidikan India NEGERI PERAK நிர்வகிக்கும் என அரசாங்கம் வலியுறுத்தியது. இதில் சம்மந்தப்பட்ட அறவாரியத்தின் இயக்குநர்களாகக் குறிப்பிட்ட கட்சியினர் நிர்வகிப்பதாகவும் சிக்கல்கள் எழும்பியது. இதுவரையில் சம்மந்தப்பட்ட அறவாரியம் என்ன மாதிரியானக் கல்வி உதவிகளை வழங்கியது என வெளிப்படையாக யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

சம்மந்தப்பட்ட அறவாரியத்தின் தலைமை இயக்குநர்கள் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதாகப் புகார்கள் பெறப்பட்ட நிலையில் இதுவரையிலும் பேராக் மாநில இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கான வலைத்தளம் கூட இல்லாதது, பல்வேறு ஐயங்களை இந்திய மக்களிடம் எழுப்பியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *