பாராங்கத்தியுடன் கைகலப்பில் ஈடுபட்ட 13 வயது இளைஞன் உட்பட 19 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 22 May, 2025
மே 22,
பாராங்கத்திகளுடன் உணவகத்தின் வாசலில் கும்பலாகக் கைகலப்பில் ஈடும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து கைகலப்பில் ஈடுபட்ட் 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 13 வயது இளைஞரும் ஒருவர் என Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்குச் ஸ்கூடாய் Taman Mutiara Mas குடியிருப்புப் பகுதியில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்ததாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த அதே நாள் மாலை 4 மணிக்குச் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டதாகவும் ஞாயிற்றுக் கிழமை கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் 19 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததாகவும் Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 13 முதல் 49 வயதுக்குற்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் 6 பேர் முந்தைய குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்டிருக்கும் 19 பேரும் மே 24 வரையில் 7 நாள்கள் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan விளக்கமளித்தார்.
Seramai 19 individu termasuk seorang remaja 13 tahun ditahan kerana terlibat dalam pergaduhan bersenjata parang di hadapan restoran di Taman Mutiara Mas. Polis menahan mereka selepas video kejadian itu tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *