PKR அப்பா மகள் கட்சி! மன்னர் ஆட்சியாகும் மலேசியா! – பாஸ் கட்சி சாடல்!

- Sangeetha K Loganathan
- 25 May, 2025
மே 25,
நடந்து முடிந்த பி.கே.ஆர் தலைமை பொறுப்புகளுக்கானத் தேர்தலின் வழி பி.கே.ஆர் ஒரு குடும்பக் கட்சி என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருப்பதாகப் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். பொதுவாக பாஸ் கட்சி மற்ற அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை, ஆனால் பி.கே.ஆர் கட்சி அரசாங்கத்தை ஆளும் கட்சி என்பதால் பி.கே.ஆர் கட்சியில் ஏற்படும் மாற்றங்களால் அது அரசாங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.
கட்சித் தேர்தலையே பொதுத்தேர்தல் போல நடத்தி பிரம்மாண்டத்தைக் காண்பித்ததற்கு முக்கிய காரணம் தன் மகள் NURUL IZZAH அனைவரின் ஆதரவுடன் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்த மட்டுமே என Datuk Seri Tuan Ibrahim Tuan Man விமர்சித்துள்ளார். பி.கே.ஆரில் ஏற்படும் மாற்றம் அப்பா மகளுக்குள் இருக்கும் உறவின் பரிமாற்றம். ஆனால் ஆளும் கட்சியான பி.கே.ஆர் கட்சியில் ஏற்படும் மாற்றங்கள் அரசாங்கத்திலும் பிரதிபலிக்கும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man கருத்து தெரிவித்தார். மலேசியா மக்களாட்சி நாடு என்பதையும் அப்பாவுக்குப் பின்னர் மகள் என்பது கட்சியோடு இருந்தால் போது அது அரசாங்கத்திலும் இல்லாமல் இருக்கும்படி Datuk Seri Tuan Ibrahim Tuan Man நினைவூட்டினார்.
Tuan Ibrahim menuduh PKR sebagai parti keluarga selepas Nurul Izzah dilihat bakal mengambil alih jawatan penting dalam parti. Beliau bimbang perubahan dalam PKR akan memberi kesan kepada kerajaan serta menggugat prinsip demokrasi negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *