அமைச்சரவை கலைக்கப்படுமா? தேவையா புதிய 2 அமைச்சர்கள் ?

top-news
FREE WEBSITE AD

மே 29,

பி.கே.ஆர் தலைமை பொறுப்புகளுக்கான  தேர்தலில் தோல்வி அடைந்த பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli யும் இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட அமைச்சுகளை வழிநடத்த புதிய அமைச்சர்கள் யார் எனும் கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. அமைச்சரவையின் முக்கிய 2 அமைச்சர்கள் பதவி விலகியதால் அமைச்சரவை கலைக்கபடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்தாலும் பி.கே.ஆர் தேர்தலில் புதிதாக வெற்றி பெற்ற Nurul Izzah Anwar, துணை அமைச்சர் ரமணன் ஆகியோருக்குச் சம்மந்தப்பட்ட அமைச்சரவை வழங்கப்படும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத் துறை என்பது கடந்த 2018 ஆம் ஆண்டு வரையில் பிரதமர் துறையின் கீழும் நிதி அமைச்சின் கீழும் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மகாதீர் அப்போதைய நிதியமைச்சரான LIM GUAN ENG கீழ் இருந்த பொருளாதாரத் துறையைப் பிரதமர் துறையின் கீழ் அமைத்து அதற்கு அப்போதைய பி.கே.ஆரின் முக்கிய தலைவரகாக இருந்அ AZMIN ALIயிடம் வழங்கினார். ஆனால் 2022 ஆம் ஆண்டு அன்வார் பிரதமரானதும் மீண்டும் பொருளாதார அமைச்சை உருவாக்கி Datuk Seri Rafizi Ramli அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 

இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு என்பது கடந்த 1974 முதல் 2018 வரையில் இயற்கை, அறிவியல், புத்தாக்கம், சுற்றுச்சூழல் அமைச்சு என இருந்து வந்தது. 2018 ஆம் ஆண்டு மகாதீர் பிரதமரானதும் ஒரே அமைச்சு 3 அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டு புதிய 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு உருவாக்கப்பட்டதும் மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இயற்கை கனிம வளங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் 2018 ஆம் ஆண்டு எதிர்கட்சியாக இருந்த பாரிசான் ஆளும் மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இந்த எதிர்ப்பு தற்போது வரையும் நீளுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட 2 அமைச்சரவையும் மீண்டும் பழைய நிலைக்குப் பிரதமர் துறைக்கும் அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சிற்கும் திரும்பும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *