தேர்தலில் தனிநபர் சாடல் வேண்டாம்! – பி.கே.ஆர் ஒழுங்கு நடவடிக்கை குழு உதவித் தலைவர் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 20 May, 2025
மே 20,
பி.கே.ஆர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்களும் உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என பி.கே.ஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உதவித் தலைவர் Sivamalar Genapathy வலியுறுத்தினார். கருத்து முரண்களை முதிர்ச்சியாகக் கையாண்ட அரசியல் கட்சியாகப் பி.கே.ஆர் இதுவரையும் இருந்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய Sivamalar Genapathy தற்போது பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் வேட்பாளராக இருக்கும் Nurul Izzah Anwar, Datuk Seri Rafizi Ramli இருவருக்குமானப் போட்டியால் உறுப்பினர்களிடையே அதிகப்படியானத் தனிநபர் சாடலானக் கருத்துகள் வெளிப்படையாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ கவுன்சிலின் வேட்பாளராக இருக்கும் Sivamalar Genapathy அனைத்து உறுப்பினர்களும் பொதுவான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றும் கட்சித் தேர்தல் என்பது தோழமைகளுக்கிடையிலானப் போட்டி என்பதை உறுப்பினர்களும் வேட்பாளர்களும் உணர வேண்டுமென கேட்டுக் கொண்டார். கட்சியின் எந்தவொரு முக்கிய தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது ஒட்டுமொத்த கட்சிக்கே அவலத்தை ஏற்படுத்தும் என்பதை Sivamalar Genapathy நினைவூட்டினார்.
PKR menegaskan agar calon dan ahli parti tidak menyerang secara peribadi dalam kempen pemilihan parti. Sivamalar Genapathy mengingatkan bahawa perbezaan pandangan harus ditangani secara matang dan serangan peribadi hanya akan menjejaskan imej keseluruhan parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *