தோல்வியை ஏற்கிறோம்! விரைவில் எழுகிறோம்! - பெரிக்காத்தான்!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசானிடம் அடைந்த தோல்வியை முழுமையாக ஏற்பதாகப் பெரிக்கானத்தான் தெரிவித்துள்ளது. பேராக்கில் வலுவான எதிர்க்கட்சியாக பெரிக்காத்தான் தொடர்ந்து செயல்படும் என பேராக் மாநிலப் பெரிக்காத்தான் தெரிவித்துள்ளது. பெரிக்காத்தானின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க தொடர்ந்து செயல்படுவதாகப் பேராக் மாநிலப் பெரிக்காத்தான் ஒருங்கிணைப்பாளர் FAIZAL AZUMU தெரிவித்தார்.
பாரிசானின் வெற்றி என்பது முழுமையான வெற்றியாகக் கருதவில்லை என்றும் 20% வாக்குகளைப் பாரிசான் இழந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பெரிக்காத்தான் மக்களுக்கு ஆதரவாக இருந்து பாரிசான் பக்காத்தான் கூட்டணிக்கு வலுவான எதிர்க்கட்சியாகத் திகழ்வோம் என அவர் வலியுறுத்தினார். 6.059 வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெரிக்காத்தான் பெற்றிருக்கும் நிலையில் தொடர்ந்து பெரிக்காத்தான் செயல்படும் என FAIZAL AZUMU தெரிவித்தார்.
Perikatan Nasional menerima kekalahan di PRK Ayer Kuning dengan hati terbuka. Pengerusi Perikatan Nasional Perak Faizal Azumu, berjanji Perikatan akan terus menjadi pembangkang kuat dan membina kepercayaan rakyat, meskipun Barisan Nasional kehilangan 20% undi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *