பூச்சோங்கில் 71 வெளிநாட்டினர்கள் கைது!
.jpg)
- Thina S
- 04 Aug, 2024
நேற்று காலை பூச்சோங் பகுதியில் குடுநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். பூச்சோங்கில் உள்ள வணிகத் தளங்களில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட INDONESIA, BANGLADESH, MYANMAR, SRI LANKA, PAKISTAN, ஆகிய வெளிநாட்டினரைக் கைது செய்ததாகத் தேசிய குடிநுழைவுத் துறையின் இயக்குநர் DATO RUSLIN JUSOH தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 71 வெளிநாட்டினரும் வேலை செய்து வந்த 14 வணிகக் கடைகளைத் தற்காலிகமாக மூடியதாகவும், சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளின் உரிமையாளர்களை விசாரணைக்காகத் தடுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *