நான் தற்காலிக அமைச்சர் மட்டும்! RAFIZI உருக்கம்!

- Sangeetha K Loganathan
- 19 May, 2025
மே 19,
இன்று ஜொகூரில் நடைபெற்ற தென் மலேசிய பொருளாதார நிகழ்ச்சியில் பங்கேற்ற பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli, பொருளாதார அமைச்சின் நிகழ்ச்சியில் அமைச்சராக நான் பங்கேற்பது இது கடையியாக இருக்கலாம் என உருக்கமாகத் தெரிவித்தார். பி.கே.ஆர் துணைத் தலைவர் போட்டியில் வெற்றி பெற்றால் அமைச்சராக நீடிப்பேன், தோல்வி அடைந்தால் அமைச்சராக நீடிக்கமாட்டேன் என கட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படையாக Datuk Seri Rafizi Ramli அறிவித்த நிலையில் இப்போது மீண்டும் பொருளாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சியில் தனது பதவி தற்காலிகமானது என்பதால் மற்றொருவர் விரைவில் இந்த பொருளாதார அமைச்சர் பதவியை நிரப்புவார் என்றும் அவர் எனக்கு பதிலாகவும் என்னை விட சிறப்பாகவும் செயலாற்றுவார் என்பதை நம்புங்கள் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பி.கே.ஆர் கட்சியின் தேர்தலுக்கு முன்னமே அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை Datuk Seri Rafizi Ramli உறுதிப்படுத்தினார்.
Datuk Seri Rafizi Ramli menyatakan kemungkinan ini adalah kali terakhir beliau hadir sebagai Menteri Ekonomi, bergantung kepada keputusan pemilihan PKR. Beliau yakin penggantinya akan menjalankan tugas dengan lebih baik sekiranya berlaku pertukaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *