இளைஞர்களைக் குறை சொல்லும் Rafizi! பி.கே.ஆர் இளைஞர் பிரிவு கண்டம்!

top-news

மே 18,

பி.கே.ஆர் கட்சிக்கானத் துணைத் தலைவர் போட்டியில் Nurul Izzah Anwarக்கும் Datuk Seri Rafizi Ramliக்கும் இடையிலானப் போட்டியில் பி.கே.ஆர் கட்சியின் இளைஞர்களைப் பகடை காயாகப் பயன்படுத்த வேண்டாம் என பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவினர் ஒரு கூட்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். முன்னதாக பி.கே.ஆர் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் மிகவும் சோர்வாகவும் துடிப்பற்று இருப்பதாக Datuk Seri Rafizi Ramli பிரச்சாரத்தில் பேசியிருந்தது பி.கே.ஆர் இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தலைமையில் இருப்பவர்கள் இப்படி பேசாமால் இளைஞர்களுக்கு வழிவிட்டால் போதும் என அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களின் செயல்பாடு பி.கே.ஆர் கட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கியும் வருகின்றனர். மற்ற அரசியல் கட்சிகளைப் போல தனிநபரின் கருத்துகளையும் அடையாளத்தையும் பி.கே.ஆர் இளைஞர் பிரிவு முன்னிலைப்படுத்துவதில்லை. பி.கே.ஆர் இளைஞர் பிரிவினரின் அறிக்கைகளும் செயல்பாடுகளும் ஒட்டு மொத்த இளைஞர் பிரிவின் குரலாகவும் செயலாகவும் இருந்து வருவதாகவும் தனிமனிதப் புகழ் வெளிச்சம் பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவில் இல்லை என்றும் Datuk Seri Rafizi Ramli கூறுவது போல துடிப்பற்ற இளைஞர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என அந்த கூட்டு அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Angkatan Muda Keadilan mengecam kenyataan Datuk Seri Rafizi Ramli yang menyifatkan golongan muda dalam parti sebagai lesu. Mereka menegaskan sumbangan belia sangat penting dan kenyataan seperti itu tidak patut dijadikan bahan kempen dalam perebutan jawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *