Rafizi Ramli அமைச்சர் பதவி! விரைவில் முடிவெடுப்போம்! - Datuk Fahmi Fadzi

top-news

மே 27,

பி.கே.ஆர் துணைத் தலைவர் போட்டியில் தோல்வி அடைந்த Datuk Seri Rafizi Ramli பொருளாதார அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கான எந்தவோர் அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை என அரசாங்கத் தொடர்பாளரும் தொடர்பு துறை அமைச்சருமான Datuk Fahmi Fadzi தெரிவித்தார். கட்சித் தேர்தலில் ஏற்படும் மாற்றத்தால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் Datuk Seri Rafizi Ramli அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டியதற்கான எந்தவோர் அவசியமும் இப்போது ஏற்படவில்லை என்பதை Datuk Fahmi Fadzi குறிப்பிட்டார்.

அதே வேளையில் பி.கே.ஆர் கட்சியின் புதிய தலைமைத்துவத்தின் முதல் உச்சமன்றக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் பி.கே.ஆர் உச்சமன்றக் கூட்டத்தில் பி.கே.ஆர் கட்சியின் தலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது முடிவு செய்யப்படும் என Datuk Fahmi Fadzi விளக்கமளித்தார். பி.கே.ஆர் உச்சமன்றக் கூட்டத்தில் அமைச்சரவை குறித்து பேசப்படுமா என்பது தெரியாது, ஆனால் நிலுவையில் உள்ள பி.கே.ஆர் கட்சியின் நியமனப் பதவிகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என Datuk Fahmi Fadzi தெரிவித்தார்.

Datuk Fahmi Fadzi memaklumkan belum ada keputusan rasmi mengenai peletakan jawatan Rafizi Ramli sebagai Menteri Ekonomi. Sebarang perubahan dalam Kabinet akan ditentukan selepas mesyuarat Majlis Pimpinan Tertinggi PKR diadakan dalam masa terdekat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *