வரலாற்றில் முத்திரை பதித்த இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு 2024
- Thina S
- 13 Oct, 2024
அக்தோபர் 13,
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று Menara Kembar Bank Rakyat மண்டபத்தில் மலேசிய இந்தியர்க் கூட்டுறவுக் கழகங்களில் மாநாடு நடைபெற்றது. மலேசிய வரலாற்றில் முதல் முறையாக அரசாங்கம் இந்தியர்களுக்காக இம்மாநாட்டை நடத்தியிருப்பதாகத் துணை அமைச்சர் டத்தோ சிறி இரமணன் தெரிவித்தார். மலேசியாவில் இந்தியச் சமூகத்திற்காகப் பல கூட்டுறவுக் கழகங்கள் செயல்பட்டு வந்தாலும் அவற்றை ஒருங்கிணைத்து ஒரு மாநாடாக நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என துணை அமைச்சர் டத்தோ சிறி இரமணன் தெரிவித்தார்.
16,000 க்கும் மேல் கூட்டுறவு கழகங்கள் இருந்தாலும் இந்தியர்களுக்காக 455 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே உள்ளது. தற்போது 200க்கும் மேற்பட்ட இந்தியக் கூட்டுறவுக் கழகங்களை ஒருங்கிணைத்திருக்கும் நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்ற கூட்டுறவுக் கழகங்களுக்கு RM30 MILLION நிதியும் வழங்கப்படவுள்ளதாகத் துணை அமைச்சர் ரமணன் தெரிவித்தார், மலேசியாவின் சிறந்த கூட்டுறவு கழகங்களின் முதல் 5 இடத்தைத் தக்க வைத்திருக்கும் ஒரே தமிழ் கூட்டுறவு கழகம் எனில் அது தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகம் என ரமணன் புகழாரம் சூட்டினார். BANK RAKYAT எனும் தேசிய வங்கி முதன் முதலாகக் கூட்டுறவு கழகமாக தொடங்கியது, ஆனால் அதை தற்போது வங்கியாக உருமாற்றி அதன் மொத்த சொத்து மதிப்பு 121பில்லியனாக இருப்பதாக ரமணன் நினைவுருத்தினார்.
இந்தியக் கூட்டுறவுக் கழகங்களை அழைத்து
இம்மாதிரியான மாநாடுகளை நடத்துவதன் மூலம் கூட்டுறவுக் கழகங்கள் பற்றியும் நம்
சமூகம் அறியும். மேலும் பல புதிய கூட்டுறவுக் கழகங்கள் தொடங்கவும் இது வழிவகுக்கும்
என்றும் மலேசியா முழுவதிலிருந்தும் இந்தியர்கள் பங்கேற்று இம்மாநாட்டைச் சிறப்படைய
வைத்ததற்குத் தமது நன்றியைத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர்
டத்தோ சிறி இரமணன் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Manimaran a/l a.veerabutram
Good evening,can ii join members koperasi What the rules and regulations tq.