RM 1.64 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் இரும்புகள் பறிமுதல்!

top-news

மே 26,


சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து மறுசுழற்சி இரும்புகளை மலேசியாவுக்குக் கடத்தியதாக நம்பப்படும் கும்பலைச் சுங்கத்துறை தேடி வருகிறது. கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் சுங்கத்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பதிவு செய்யப்படாத 12 கொள்கலன்களில் 272.6 டன் எடையிலான மறுசுழற்சி இரும்புகள் இருப்பதைக் கண்டறிந்ததாகச் சுங்கத்துறை உதவி இயக்குநர் Raizam Setapa தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட இரும்புகள் “scrap metal” என்பதால் SIRIM எனப்படும் தொழில்துறை தரநிலை ஆய்வின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட கொள்கலன்களிலிருந்து மீட்கப்பட்ட இரும்புகள் முறையான ஆவணங்களையும் உரிமங்களையும் கொண்டிருக்கவில்லை என சுங்கத்துறை உதவி இயக்குநர் Raizam Setapa தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட இரும்புகளின் மதிப்பு RM 1.64 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

Jabatan Kastam merampas 272.6 tan besi buruk dalam 12 kontena tidak berdaftar di Pelabuhan Barat Klang, bernilai RM1.64 juta. Bahan kitar semula itu tidak memiliki dokumen sah dan kelulusan SIRIM. Sindiket berkaitan sedang diburu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *