இந்தோனேசியாவில் தன் காயத்தை தானே குணப்படுத்திய ஓராங்கூத்தான் குரங்கு!
- Muthu Kumar
- 17 May, 2024
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வசிக்கும் ஒரு ஒராங்குட்டான் குரங்கு தனது முகத்தில் ஏற்பட்ட காயத்தை மூலிகையை வைத்து தானே சரி செய்துள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விலங்கு ஒன்று மருத்துவ முறையை பயன்படுத்துவது முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சுமத்ரா தீவில் வசிக்கும் கணன் லீசர் தேசிய பூங்காவில் ராகூஷ் என்ற 35 வயதான ஒராங்குட்டான் குரங்கு வசித்து வருகிறது. இதன் செயல்பாடுகளை பல ஆண்டுகளாகவே ஆய்வாளர்கள் கண்காணித்து வந்திருக்கிறார்கள். இந்த ஒராங்குட்டான் கால நிலைகளை ஞாபகம் வைத்து காடுகளின் பல பகுதிகளில் அலைந்து திரிந்து தனக்கு விருப்பமான பழங்களை சாப்பிடுவதை அவர்கள் கண்டுபிடித்து இருந்தனர். இந்த நிலையில் உலகத்தின் முதல் விலங்கு மருத்துவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ராகூஷ்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி இந்த குரங்குக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது இதை அடுத்து அந்த குரங்கை ஆய்வாளர்கள் கண்காணிக்க தொடங்கிய நிலையில், சில நாட்களில் அந்த காயம் சரியாகி இருக்கிறது. ஆனால் விஷயத்தை ஆய்வாளர்கள் அப்போது கவனிக்கவில்லை. புகைப்படங்களை ஆய்வு செய்த பின்னர்தான் அது தன் காயங்களை குணப்படுத்துவதற்காக மூலிகையை பயன்படுத்தியது தெரியவந்தது.
பல ஆண்டுகளாக நாம் காயங்களை சரி செய்வதற்காக மஞ்சளை பயன்படுத்தி வருகிறோம் அல்லவா அந்த மஞ்சள் வேரை வைத்து தான் அது தனது காயத்தை ஆற்றி இருக்கிறது. காட்டில் கிடைக்கும் மஞ்சளை தேடி எடுத்து அதன் வேரை வாயால் கடித்து கசக்கி ஒரு பேஸ்ட் போல முகத்தில் பூசி இருக்கிறது. ஒரே மாதத்தில் காயம் இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு அது சரியாகி இருந்தது.
மிருகம் ஒன்று தனது காயத்தை சரி செய்ய மூலிகைகளை பயன்படுத்துவது குறித்து தெரிய வந்துள்ளது இதுவே முதல் முறை என்கிறார் ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழக பேராசிரியரான மைக்கேல் ஹவ் மேன்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *