ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தார்!.. ஈரான் அரசு அறிவிப்பு!
- Muthu Kumar
- 20 May, 2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று ஆய்வு செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.
ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் விபத்தில் பலியாகி உள்ளனர்.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார்.
அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *