ஈராக் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு திருமண வயது 9 என நிறைவேறிய மசோதா!

top-news
FREE WEBSITE AD

மேற்கு ஆசிய நாடான ஈராக்கின் நாடாளுமன்றத்தில் ஷியா முஸ்லிம் பழமைவாதக் குழு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.முகமது ஷியா அல்-சூடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில் பெண்களின் திருமண வயது 18 ஆகும். 1950 ஆம் ஆண்டு குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று ஐ.நா. நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சூழலில், பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை திருத்த ஈராக் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு, ஒரு மசோதா சமர்ப்பிக்கப்பட்டது.

ஈராக் அரசின் இந்த முடிவை பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் எதிர்க்கின்றன. இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, பெண்களின் திருமண வயதை திருத்திய இந்த மசோதாவை ஈராக் அரசு இயற்ற முயற்சித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்த நிலையில், நாட்டின் பெரும்பான்மை பகுதியில் வசிக்கும் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், சன்னி முஸ்லிம் பெண்களுக்கு 15 ஆகவும் குறைக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விஷயங்களில் முடிவெடுக்க இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நீதியை மேம்படுத்தவும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் இந்த சட்டம் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை என்று ஈராக் நாடாளுமன்ற சபாநாயகர் கூறினார்.

பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈராக்கில் குழந்தை திருமணச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *