பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய்க்கு ஆலோசனை!

top-news
FREE WEBSITE AD

பிரசாந்த் கிஷோர் உடன் நடந்த சந்திப்பில் நடிகர் விஜயிடம் அவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

வடமாநிலங்களில் பாஜக அடுத்தடுத்து வெற்றிபெற, வலிமையாக இருக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று.பூத் கமிட்டி அதோடு வாக்காளர் பட்டியலில் ஒரு பக்கத்தில் 10 வாக்குகள் இருக்கிறது என்றால் அதில் 6க்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் பிளான். பாஜகவின் இந்த வியூகம் அங்கே தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்து உள்ளது.

இதைத்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் திட்டமாக வழங்கி உள்ளாராம். ஆனால் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் இல்லாமல் வீட்டில் 3 வாக்குகள் இருந்தால் அதில் குறைந்தது 1 வாக்கை பெற வேண்டும். அப்பா - அம்மா - மகன் இருந்தால்.. மகன் வாக்கை பெற வேண்டும் என்று.. அதாவது இளைஞர்கள் வாக்கை பிடிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி உள்ளாராம்.

பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. பிகே இப்போது ஐபேக்கில் இல்லை. இதனால் அவர் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக வர மாட்டார். ஐபேக்கும் வராது. (ஐபேக் திமுகவிடம் மீண்டும் செல்வதாக பேச்சு உள்ளது)

இதனால் பிகே விஜய்க்கு வேலை செய்ய மாட்டார். மாறாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு உதவலாம். மக்கள் நீதி மய்யம் உருவாக்கப்பட்ட போது அதற்கு பிகே பணிகளை செய்துள்ளார். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படையை உருவாக்க இவரை அழைக்கலாம்.

விஜய் மாநிலம் முழுக்க யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதற்கான திட்டங்களை வகுக்கலாம். அல்லது தனிப்பட்ட வகையில் விஜய்க்கு அரசியல் பயிற்சி தரலாம். குஜராத் முதல்வராக இருந்து பிரதமர் பதவிக்கு காய் நகர்த்திய போது பிகே மோடிக்கும் இதே பயிற்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக செய்தியாளர் சந்திப்பில் எப்படி பேச வேண்டும் என்று மோடிக்கு பிரசாந்த் கிஷோர்தான் ஆலோசனை வழங்கினார்.

ஆதவ் அர்ஜுனா விஜயுடன் கரம் கோர்த்து உள்ளார். ஏற்கனவே கட்சியின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் பிரசாந்த் கிஷோர் உடன் திடீரென சந்திப்பு நடந்திருப்பது விவாதங்களை எழுப்பி உள்ளது.

இதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் விஜயின் ஸ்பெஷல் ஆலோசகராக மாற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் வரை ஸ்பெஷல் ஆலோசகர் என்ற பெயரில், விஜய்க்கு தனிப்பட்ட வகையில் ஆலோசனைகளை வழங்குவார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது.

ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *