RM 6 மில்லியன் ஊழல் வழக்கில் DATUK உட்பட 4 ஆண்கள் 2 பெண்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 20 May, 2025
மே 20,
அரசாங்க மேம்பாடு குத்தகை தொடர்பாக ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படும் DATUK பட்டம் கொண்ட நிறுவன உரிமையாளரும் அரசு ஊழியர்களும் என மொத்தம் 6 பேர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021 முதல் ஜொகூரில் உள்ள பல்வேறு அரசு வளாகங்கள் தொடர்பானக் குத்தகையைப் பெறவும், பெறப்பட்ட குத்தகையை நிறைவாக முழுமைப்படுத்தாமல் இருக்க அரசு கண்காணிப்பாளர்களுக்கு விலை உயர்ந்த பொருள்களைப் பரிசாகக் கொடுத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்பு விசாரணைக் குழு இயக்குநர் Datuk Mohamad Zamri Zainul Abidin தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 6 பேரில் ஐவரை 5 நாள்கள் விசாரணைக் காவலிலும் ஒருவரை 3 நாள்கள் விசாரணைக் காவலிலும் தடுத்து வைக்கும்படி புத்ராஜெயா Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யபட்டவர்களுக்குச் சொந்தமான 95 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவை சுமார் RM 6 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையவை என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஊழலில் தலைநகரில் உள்ள இயக்குநர் பொறுப்பில் இருக்கும் அரசு ஊழியர் ஒருவரும் அரசு பொறியாளர் ஒருவரும் முக்கிய சந்தேகநபர்களாக விசாரிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
Seorang pemilik syarikat bergelar Datuk dan lima yang lain ditahan SPRM atas dakwaan rasuah melibatkan kontrak sewaan pembangunan kerajaan bernilai RM6 juta. Mereka disyaki memberi hadiah mahal kepada pegawai pengawas kerajaan sejak 2021 di Johor.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *