இங்கிலாந்து ராயல் சொசைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியர் டாக்டர் ரவிகாதேவி சம்பந்தமூர்த்தி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 22-

உலகின் பழைமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க இங்கிலாந்து தேசிய அறிவியல் கழகமான ராயல் சொசைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியரானார் டாக்டர் ரவிகாதேவி சம்பந்தமூர்த்தி.

மலேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரான டாக்டர் ரவிகாதேவி தேர்ந்தெடுக்கப்பட்டது. நாட்டிற்கு ஒரு வரலாற்று மைல்கல்லாகும் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு,மொஸ்தி குறிப்பிட்டுள்ளது.வரும் ஜூலை 11ஆம் தேதி டாக்டர் ரவிகாதேவி லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவார்.

அங்கு, அவர் ராயல் சொசைட்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனப் புத்தகத்தில் கையெழுத்திடுவார். 1979ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் ஆராய்ச்சியில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், 1983ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உயிர் வேதியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம், எம்.பி.ஒ.பியில் அறிவியல் ஆலோசகராகவும் டாக்டர் ரவிகாதேவி பணியாற்றியுள்ளார்.

Dr. Ravichathevi Sambanthamurthi menjadi rakyat Malaysia pertama dipilih menyertai Royal Society, badan sains tertua di dunia. Beliau pakar bio-kimia dan pernah berkhidmat di MPOB. Upacara rasmi penyertaan akan berlangsung di London pada 11 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *