பாலஸ்தீனியர்களுக்கு மலேசியாவில் சிகிச்சை! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5: இஸ்ரேலிய தாக்குதலால் காயமுற்ற பாலஸ்தீனியர்களை சிகிச்சைக்காக மலேசியாவிற்குக் கொண்டு வர அரசு உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்கும், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை சிகிச்சைக்காக மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கும் உதவுவதற்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் தாம் தொடர்பு கொண்டதாக அன்வார் கூறினார்.

நேற்று மாலை புக்கிட் ஜலீலில் நடந்த பாலஸ்தீன ஒற்றுமைப் பேரணியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

துருக்கிய அதிபர் ரிசெப் எர்டோகன் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவையும் இத்தகைய மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காகத் தாம்  தொடர்பு கொண்டதாக அன்வார் கூறினார்.

அமைச்சர் பெருமக்கள், முக்கியத் தலைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் உட்பட, சுமார் 12,000 பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்பாளர்கள் மலேசிய தேசியக்கொடி மற்றும் பாலஸ்தீன கொடியை அசைத்து பாலஸ்தீனம் மற்றும் விடுதலை பாலஸ்தீனம் வாழ்க என்று கோஷமிட்டனர்.

இந்தப் பேரணியில் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலைவர்களின் உரைகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து வெகுஜன மக்ரிப் தொழுகை இடம்பெற்றது.
ஜூலை 31 அன்று ஈரானில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை மலேசியா கண்டிக்கிறது என்பதை உலகிற்கு ஒரு வலுவான செய்தியாகத் தெரிவிப்பதற்காகத்தான்  இந்தப் பேரணி என்று அன்வார் ஏற்கனவே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *