ஒருதலைப்பட்சமான எந்த ஒரு வரி விதிப்பையும் ஆசியான் நிராகரிக்கிறது!

top-news
FREE WEBSITE AD

பேங்காக். ஏப். 19-

ஒருதலைப்பட்சமான எந்த ஒரு வரி விதிப்பையும் ஆசியான் நிராகரிக்கும் என்பதை, பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.காரணம், அத்தகைய நடவடிக்கைகள் பன்முகத்தன்மையின் உணர்வுக்கு முரணானவை என்று அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி குறித்து. தாய்லாந்து பிரதமர் பெத்தோங்தான் ஷினவத்ராவுடன் கலந்துபேச தமக்கு வாய்ப்புக் கிடைத்ததாக, தாய்லாந்துக்கு இரண்டு நாள் பணி நிமித்த பயணம் மேற்கொண்டிருந்த அன்வார் கூறியுள்ளார்.ஆசியான் வர்த்தக மற்றும் நிதி அமைச்சர்களுடனான கூட்டங்களானவை, வரி விதிப்பு குறித்த அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அன்வார் கூறியுள்ளார்.

"நாங்கள் ஒருமித்த ஆசியான் கருத்தை உருவாக்கியுள்ளோம். சுதந்திரமான வர்த்தகம் மற்றும் பல தரப்பு வாதத்தை ஆசியான் ஆதரிக்கிறது."பல தரப்பு ஒப்பந்தங்களின் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால், எந்த ஓர் ஒருதலைப்பட்சமான வரி விதிப்பையும் நாங்கள் ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கின்றோம்' என்று,தாய்லாந்துக்கான தமது இரண்டு நாள் பயணத்தின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை பேங்காக்கில் செய்தியாளர்களை சந்தித்தபோது நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

ஆசியான் நாடுகள் மற்றும் அதன் முக்கியமான வட்டார நாடுகளான ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகியவை மத்தியிலான இதன் தொடர்பிலான ஒருமித்த கருத்துகளிநிறைவை வெளிப்படுத்தினார்.

கூட்டாக பல தரப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஆசியான் தலைவர்கள் ஒப்புக் கொண்டதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அன்வார் தெரிவித்தார்.அமெரிக்கா

விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்பதை ஆசியானும் மலேசியாவும் தெளிவுபடுத்தியுள்ளன.தனது பரஸ்பர வர்த்தகம் மற்றும் கட்டண விதிப்பு கொள்கையின் கீழ் அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, குறைந்தது 10 விழுக்காட்டு வரி விதிப்பை டிரம்பின் நிர்வாகம் இம்மாதம் 3ஆம் தேதி முதல் அமல்படுத்தி இருக்கிறது.

இக்கட்டண விதிப்பினால், ஆசியானின் இந்தோசீனா உறுப்பு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.கம்போடியாவுக்கு எதிராக 49 விழுக்காடும் லாவோசுக்கு எதிராக 48 விழுக்காடும், வியட்னாமுக்கு எதிராக 46 விழுக்காடும் மியன்மாருக்கு எதிராக 44 விழுக்காடுமாக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்து 36 விழுக்காடு. இந்தோனேசியா 32 விழுக்காடு. புரூணை மற்றும் மலேசியா தலா 24 விழுக்காடு, பிலிப்பைன்ஸ் 17 விழுக்காடு மற்றும் சிங்கப்பூர் 10 விழுக்காடு என்ற வகையில் வரி விதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றன.இந்த பரஸ்பர வரி விதிப்பு அமலாக்கம் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனாவுக்கு எதிரான அந்த வரி விதிப்பு தொடர்ந்து அமலில் இருக்கிறது.

Anwar Ibrahim tegaskan ASEAN tolak cukai sepihak kerana bercanggah dengan prinsip pelbagai hala. ASEAN, Jepun dan New Zealand bersetuju guna pendekatan pelbagai hala dalam rundingan dengan AS. Cukai baharu AS jejas serius negara ASEAN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *