புத்ரா ஹைட்ஸ் சம்பவம் மீதான பூர்வாங்க அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்!

- Muthu Kumar
- 19 Apr, 2025
செலாயாங் பாரு, ஏப். 19-
சிலாங்கூரின் சுபாங் ஜெயாவுக்கு அருகில் உள்ள புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவம் மீதான ஒரு பூர்வாங்க அறிக்கை அடுத்த வாரத்தில் பொதுவில் அறிவிக்கப்படவுள்ளது.
அச்சம்பவத்தில் அலட்சியம் அல்லது தீங்கிழைக்கும் கூறுகள் நிகழ்ந்துள்ளனவா என்பது குறித்த போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் உசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
"வெடிப்புச் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் கிட்டதட்ட முடிவுறும் கட்டத்தில் இருக்கின்றன. வெடித்த எரிவாயுக் குழாயை நாங்கள் கண்டு பிடித்தும் விட்டோம். போலீஸ் தடயவியல், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா மற்றும் தீயணைப்பு மீட்பு இலாகாவினால் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
"ஆதலால், இன்னும் ஒரு வாரத்திற்குக் காத்திருங்கள். எங்களின் கண்டு பிடிப்பு மீதான ஒரு பூர்வாங்க அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம்" என்று செலாயாங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் உசேன் தெரிவித்தார்.இம்மாதம் ஒன்றாம் தேதி காலை 8.10 மணியளவில் அந்த எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அக்குழாய் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் அதனுடன் சேர்த்து மொத்தம் மூன்று எரிவாயுக் குழாய்கள் இருந்தன.
அச்சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள உள்ள வீடுகளில் வீடுகளில் 81 வீடுகள் முற்றாக அழிந்துப் போயின. மேலும் 81 வீடுகள் பாதி அளவுக்கு அழிந்துப் போயின. 57 வீடுகள் சேதமடைந்தாலும் தீயினால் பாதிக்கப்படவில்லை.
Selayang Baru: Laporan awal insiden letupan paip gas di Putra Heights akan diumum minggu depan. Polis masih siasat kemungkinan kecuaian. Letupan rosakkan 219 rumah. Siasatan oleh pelbagai agensi hampir selesai, kata Ketua Polis Selangor, Hussein Omar Khan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *