கடன் பிரச்சனை! 17 வயது இளைஞரைக் கத்தியால் குத்திய நண்பர்!

- Sangeetha K Loganathan
- 19 May, 2025
மே 19,
நண்பரிடம் கடன் பெற்று திருப்பிக் கொடுக்க தாமதமானதால் 17 வயது இளைஞரைக் கத்தியால் குத்திய அவரின் 23 வயது நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். அதிகாலை 3.30 மணியளவில் 17 வயது இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரின் 23 வயது நண்பர் இடைமறித்து கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசார்ணையில் தெரிய வந்துள்ளதாக Christopher Patit தெரிவித்தார்.
இச்சம்பவம் மலாக்காவில் உள்ள Kampung Paya Sum குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்காளான 17 வயது இளைஞர் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கத்தியால் குத்திய 23 வயது இளைஞர் மாலை 6.15 மணிக்கு ஜொகூரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள 23 வயது இளைஞர் மீது 9 குற்றச்சம்பங்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Akibat gagal membayar hutang tepat pada masanya, seorang remaja lelaki berusia 17 tahun ditikam oleh rakannya yang berusia 23 tahun di Melaka. Suspek ditahan di Johor dan memiliki sembilan rekod jenayah lampau, menurut polis Melaka Tengah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *