எச் 1 பி விசா திட்டத்துக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு!

- Muthu Kumar
- 30 Dec, 2024
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் அமெரிக்காவின் அதிபராக அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இதற்கிடையில், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில், வெளிநாட்டினர் பணியில் சேர வழங்கப்படும் எச் 1 பி விசா திட்டத்துக்கு அதிபர் டிரம்ப் ஆதரவளித்துள்ளார். அந்நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில், இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அமர்த்தப்படுவதற்கு வலதுசாரி அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எச்1 பி விசாவுக்கு ஆதரவாக பேசி வந்த டெஸ்லா தலைவர் மஸ்க், இந்த திட்டத்தினால் தான், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவை வலுவடைய செய்யும் நிறுவனங்கள் உருவானதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மௌனம் கலைத்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், "எச்1 பி விசா என்பது சிறப்பான திட்டம்" என்றார்.
மேலும், தனக்கு சொந்தமான தொழில்களில் கூட இந்த விசா மூலம் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், எப்போதும் இதற்கு சாதகமாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். முதன்முறையாக டிரம்ப் அதிபரான போது, எச்1 பி விசாவுக்கு பல முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வர போவதாக அவர் கூறிய நிலையில், தற்போது அதற்கு ஆதரவாக பேசுவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *