ரூ என்று எழுதி தமிழ் வளர்க்குறீர்களா?உங்கள் பெயர் ஸ்டாலின் தமிழ் பெயரா?

top-news
FREE WEBSITE AD

தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ முதன்மைப்படுத்தியது தொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றிக் கொள்ள தயாரா? தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்றால், தமிழக முதல்வர் பெயரை மாற்றிக் கொண்டு சட்டப்பேரவைக்கு வரட்டும் என்று விமர்சித்துள்ளார்.

2024-25ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். அதற்கு முன்பாக இன்று தமிழ்நாடு அரசு தரப்பில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூபாய் குறியீட்டிற்கு ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான "ரூ" பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் லோகோவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பட்ஜெட்டில் தமிழ் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதற்கு பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், எப்போது திமுகவினருக்கு எந்த எண்ணம் வந்தது. திமுகவினர் என்ன முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்களா என்ன? அவர்களுக்கு எப்போது மற்றவர்கள் பேசும் போதுதான் தமிழர்கள் பற்றியும், தமிழையும் பற்றியும் நினைவுக்கு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் பெயரை மாற்றிக் கொள்ள தயாரா? தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அனைவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் பெயரை மாற்றிக் கொண்டு சட்டப்பேரவைக்கு வரட்டும். தேசிய ஒருமைப்பாட்டிற்கே இவர்கள் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கிறார்கள். மாநில அக்கறையுடன் கூடிய தேசிய உணர்வும், தேசிய உணர்வுடன் கூடிய மாநில அக்கறை வேண்டும்.

அதை பற்றி சிந்தனை திமுக எப்போதும் இருந்ததில்லை. அண்ணன் ஸ்டாலின் தனது பெயரை மாற்றிக் கொள்ளட்டும். இத்தனை நாட்களாக திமுகவுக்கு ஏன் இந்தி எழுத்துகள் பற்றியே நினைவுக்கு வரவில்லை. இத்தனை நாட்களாக அவர்கள் தமிழர்களாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லையா? அவர்கள் இன்றுதான் தமிழர்களாக பிறந்துள்ளார்களா?

இதுபோன்ற குழப்பத்தை எதற்காக ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்படுவதற்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல. தமிழ்க் குழந்தைகளை வஞ்சித்து கொண்டு தமிழை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள். தமிழை படிக்காமல் படித்து முடிக்க கூடிய சூழல் இங்கு உள்ளது. 50 ஆயிரம் குழந்தைகள் மொழி பாடத்திட்டத்தை எழுதவே வரவில்லை.

அதனை எல்லாம் சரி செய்யாமல், இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சி, தங்களின் தோல்விகளை மறைக்க இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் பெருமையை இவர்களின் பெருமையை போல் பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள். தேசிய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *