தமிழக சட்டசபையில் வாக்குவாதம்- "பாரு ஆட்சி மாறும்" என எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

top-news
FREE WEBSITE AD

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.

இதில், அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான நிலையில் பலர் சிகிச்சையில் மருத்துவமனையில் உள்ளனர்.

இதனை குறிப்பிடும் வகையிலும், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்தும் வந்திருந்தனர். சட்டசபை தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஆனாலும் அதிமுகவினர் கேட்பதாக இல்லை, சில எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து போஸ்டரை கையில் ஏந்தி அமளி செய்தனர். இதனால் சட்டசபை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதையடுத்து  அமளி செய்த அதிமுக எம்எல்ஏக்களை காவலர்கள்  குண்டுக்கட்டாக வெளியேற்றினர். அப்போது இருக்கையில் இருந்த எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த வேளையில் சட்டசபைக்கு வெளியே அதிமுக எம்எல்ஏக்களுக்கும் போலீசார்களுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் எம்எல்ஏக்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கியதற்கு எம்எல்ஏக்கள் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், போலீசார் அதிமுக எம்எல்ஏக்களை சூழ்ந்து கொண்டு நின்றனர்.

இதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை உருவானது. இந்த வேலையில் எடப்பாடி பழனிசாமி கோபமடைந்தார். போலீசாரை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்திய எடப்பாடி பழனிசாமி ‘ஏய்.. ஏய்.. எதுக்கு அடிக்கிறீங்க.. பாரு ஆட்சி மாறும்’.. என கொந்தளித்தார். அதைப்போல், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *