ஆப்பிள் நிறுவன ஐபேட் விளம்பரத்தை கடுமையாக எதிர்த்த ஹிருத்திக் ரோஷன்!

top-news
FREE WEBSITE AD

ஆப்பிள் தங்களது ஐபேட் மாடல்களை அப்டேட் செய்துள்ளது. இந்நிலையில் புதிய ஐபேட் ப்ரோ மாடலை விளம்பரப்படுத்த 'கிரஷ்' என்ற பெயரில் விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அந்த விளம்பரத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் விளையாட்டு இயந்திரங்கள், பியானோ, கிடார் போன்ற இசை வாத்தியங்கள், புத்தகங்கள், வண்ண பெயிண்டுகள், ஸ்பீக்கர்கள், விளக்குகள், சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பெரிய நசுக்கி அழிக்கும் எந்திரத்தின் கீழ் வைத்து நசுக்கப்படுகிறது. பின்னர் அவை மெலிதான புதிய ஐபேட் ப்ரோ உருவாவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இது கலைத்துறையினரிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.


இந்த விளம்பரம் பயனுள்ள பொருட்கள், கலைகளை எந்தளவிற்கு தொழில்நுட்பம் அழிக்கிறது என்பதை காட்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய விளம்பரம் மிகவும் சோகமானதாகவும், அறியாமையில் உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது' என விமர்சித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *