புந்தோங்கில் வீட்டு வசதி மேம்பாட்டுக்கு RM 1.3 மில்லியன் ஒதுக்கீடு! - Thulsi Manogaran

- Sangeetha K Loganathan
- 16 May, 2025
மே 16,
புந்தோங்கில் உள்ள Pangsa Harmoni அடுக்குமாடிக் குடியிருப்பின் மேம்பாட்டுக்கு மடானி அரசாங்கம் RM 1.3 மில்லியன் நிதி வழங்கியிருப்பதாகப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran தெரிவித்தார். இந்த நிதியானது சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் மேம்பாட்டுக்கு முக்கியமாக கட்டிடச் சேதத்திற்கும், மின்சாரப் பழுதுக்கும் பயன்படுத்தப்படுவதுடன் சுகாதாரத்திற்கும் வகை செய்யும் என Thulsi Manogaran நம்பிக்கை தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட Pangsa Harmoni அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகமான இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் சம்மந்தப்பட்ட நிதியை அரசாங்கம் எதற்காகப் பயன்படுத்தவுள்ளது என்பதற்கான ஒரு சந்திப்புக் கூட்டத்தையும் நடத்தி மக்களுக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran தெரிவித்தார்.
Kerajaan Madani memperuntukkan RM1.3 juta bagi menaik taraf pangsapuri Pangsa Harmoni di Buntong. Dana ini akan digunakan untuk membaiki kerosakan bangunan dan elektrik serta meningkatkan kebersihan, kata ADUN Buntong, Thulsi Manogaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *