இந்தியா விதிக்கும் வரிக்கு இணையாக இனிமேல் அமெரிக்கா வரி விதிக்கும்- ட்ரம்ப்!

top-news
FREE WEBSITE AD

இந்தியா அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இந்தியா விதிக்கும் வரிக்கும் இணையாக இனிமேல் அமெரிக்காவும் இந்தியாவின் பொருட்கள் மீது வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்று அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கவில்லை. இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் ஏன் இந்த முறை மோடி பெயரை கூட எங்கும் டிரம்ப் சொல்லவில்லை.. அதோடு டிரம்ப் ஏன் மோடியை அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருந்தும் மோடி பெயரை எங்கும் டிரம்ப் பேசவில்லை. மோடிக்கு ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடந்த சந்திப்பில் இரண்டு தரப்பும் பல விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பிற்கு முன்னதாக பேசிய டொனால்ட் டிரம்ப்.. இந்தியா அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இந்தியா விதிக்கும் வரிக்கும் இணையாக இனிமேல் அமெரிக்காவும் இந்தியாவின் பொருட்கள் மீது வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மோடியை சந்திக்கும் முன் பொதுவாக எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள்தான் அதிகம் எங்களை பாதிக்கின்றன. ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடியவில்லை. காரணம் கடுமையான வரி. இதனால் அந்த பைக்குகள் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேதான் டெஸ்லாவிற்கும். அப்படி என்றால் இனி நாங்களும் அதேபோன்ற வரிகளை விதிப்போம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா , தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.

டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்தியா , தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும் . இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால். டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *