இந்திய பிரதமர் பேசி கொஞ்ச நேரத்தில் பறந்து வந்த ட்ரோன்கள்- பாகிஸ்தான் அடாவடி!

top-news
FREE WEBSITE AD

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று இரவு 8 மணி அளவில் உரையாற்றினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி பேசிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு காஷ்மீர் எல்லையை நோக்கி அத்துமீறியதாகவும் அவை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் தாக்கி அளிக்கப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் காணொளி வெளியிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத தளங்கள் மற்றும் விமான தளங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பலத்த சேதத்தை சந்தித்ததாக இந்திய ராணுவமும் விளக்கம் அளித்து இருந்தது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்ததோடு, பாகிஸ்தான் அரசையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் அணுகுண்டு தாக்குதல் என்ற பேச்சுக்கெல்லாம் இனி அஞ்சப் போவதில்லை என்றும், இனி பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி உரையாற்றிய சிறிது நேரத்திலேயே ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் ட்ரோன்கள் அத்துமீறியதாக ANI காணொளி வெளியிட்டது. ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கும்பலாக ட்ரோன்கள் வந்ததாகவும் உடனடியாக இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.

சம்பா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான காணொளி வெளியானது. இந்த நிலையில் மிக குறைந்த அளவிலான ட்ரோன்கள் சம்பா செக்டார் பகுதியில் வந்ததாகவும் அவை உடனடியாக தாக்கி அழிக்கப்பட்டதாகவும், அச்சம் கொள்ள தேவையில்லை இந்திய ராணுவம் விளக்கம் அளித்ததாகவும் ANI நிறுவனம் கூறியுள்ளது.

இதேபோல பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், அம்ரிஷ்டர், ஹஸியார்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் இருந்ததாகவும், உடனடியாக அவற்றை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அம்மாநில காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *