2 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது!

top-news

 (இரா.கோபி)

கோலாலம்பூர், அக். 9- புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்பிரிவு கோலாலம்பூர் பகுதியில் சோதனை மேற்கொண்டதில், 2 கோடியே 45 லட்சத்து 80ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்பு குற்றப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கொக் சின் தெரிவித்தார்.

இம்மாதம் 5ஆம் தேதி கோலாலம்பூர் பகுதிகளிலும் ஜொகூர் பகுதிகளிலும் மேற்கொண்ட சோதனையில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 71.26 கிலோ கிராம் ஷாபு வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.  மற்றொரு சோதனையில் 34 வயதுடைய மலாய் ஆடவரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய காரிலிருந்து 40.69 கிலோ கிராம் ஷாபு போதைப்பொருள் 19.49 கிலோ கிராம் கொத்தமின் எனும் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது.

ஜொகூரிலுள்ள கம்போங் ரவாங் தூவாரில் சீன ஆடவரும் தாய்லாந்து நாட்டு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 138 கிராம் ஹெரோயினும் 30 ஹெரோமின் மாத்திரை கண்டெடுக்கப்பட்டது.

ஜொகூரில் முத்தியாரா மகாராணியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 46 வயது சீன ஆடவரையும் அவருடைய காதலி தாய்லாந்து பிரஜையையும் கைது செய்தனர். 19.19 கிராம் ஷாபு எனும் போதைப்பொருள்  அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது . பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் கிட்டத்தட்ட 6 லட்சத்து 70,000 பேர் உபயோகிக்கக்கூடியது என்று காவ் கோக் சின் தெரிவித்தார்.

இம்மாதம் 7ஆம் தேதி இரவு 8 மணியளவில் செந்தூல் கெப்போங்கில் 32 வயது மலாய் ஆடவரை கைது செய்து அவரின் காரை சோதனை மேற்கொண்டதில் அக்காரிலிருந்து 350 பெட்டலங்களில் மெத்தமின் எனப்படும் 357.603 கிராம் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 1 லட்சத்து 70,000 பேர் உபயோகிக்கக் கூடியது என்று அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு சம்பவத்தில் இம்மாதம் 10.30 மணியளவில் கோப்பெங் பண்டார் மங்சா ஜாலாரா பகுதியில் ஒரு ஆடவரையும் 2 தாய்லாந்து பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை பரிசோதனை செய்ததில் 250 பெட்டலாங்களில் மொத்தமின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. அதன் எடை 255.574 கிராம் என்று அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 81 லட்சத்து 78 ஆயிரத்து 368 வெள்ளி என்றும், 1 லட்சத்து 277.870 பேர் பயன்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் புக்கிட் அமான் போதைப்பொருள் நடவடிக்கையில் 2 கோடியே 45 லட்சத்து 80 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக எ டத்தோஸ்ரீ காவ் கொக் சின் தெரிவித்தார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *