அமெரிக்காவிற்கு சீனா வைத்த செக்- கலக்கத்தில் ட்ரம்ப்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமாக நடந்து வருகிறது. ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்து இதைத் தொடங்கி வைத்ததே டிரம்ப் தான். உலகின் மற்ற நாடுகள் மீதான வரிகளை நிறுத்தி வைத்த டிரம்ப், சீனா மீதான வரிகளை மட்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறார்.

இதற்கிடையே சீன அரசு தனது நாட்டில் இருக்கும் விமான நிறுவனங்கள் எதுவும் இனி அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கிலிருந்து ஜெட் விமானங்களை வாங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்காவும் சீனாவும் வரிப் போர் நடத்தி வருகிறது.

அமெரிக்கா இப்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரை வரிகளை வசூலிக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கிட்டதட்ட சட்டவிரோத மிரட்டல் எனக் குறிப்பிட்டுள்ள சீன அரசும் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி அமெரிக்க இறக்குமதிகளுக்கு 125 சதவீதம் வரிகளை விதித்துள்ளது. இதற்கு மேல் வரிகளை உயர்த்துவது அர்த்தமற்றது எனக் குறிப்பிட்ட சீனா, இனி அமெரிக்கா வரிகளை உயர்த்தினாலும் அதற்குப் பதிலடி தரப்போவது இல்லை எனச் சீனா தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் தான் சீன அரசு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்தில் இருந்து ஜெட்களை வாங்கக்கூடாது என சீனா விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த உத்தரவு அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அடியாகவே இருக்கும்.

ஏனென்றால் ஜெட் விமான உற்பத்தியைப் பொறுத்தவரை உலகில் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே, சமீப ஆண்டுகளாக அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் போயிங் விமானங்கள் பெயர் கெட்டுப் போய் இருக்கிறது. ஆர்டர்களும் குறைந்துள்ளன. இந்தச் சூழலில் சீனாவும் போய் விமானங்களை நிறுத்தினால் அது போயிங் நிறுவனத்திற்குப் பெரிய அடியாகவே இருக்கும். மேலும், போயிங் நிறுவனத்தின் பேக்டரி எல்லாம் அமெரிக்காவில் தான் இருக்கிறது. ஆர்டர்களை இழந்து அது ஆட்குறைப்பு நடவடிக்கை செய்தால் இதனால் அமெரிக்கர்களே பெரியளவில் பாதிக்கப்படுவார்கள்.

முன்பே குறிப்பிட்டது போல ஜெட் விமான உற்பத்தியில் போயிங் மற்றும் ஏர்பஸ் மட்டுமே உள்ளன. இதில் போயிங் அமெரிக்க நிறுவனம். ஏர்பஸ் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்டது. போயிங் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சீன விமான நிறுவனங்கள் இப்போது ஏர் பஸ் பக்கம் திரும்பும் இது அவர்களுக்கு லாபமாகவே இருக்கும்.

ஜெட் விமானங்கள் மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமானம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வாங்குவதையும் நிறுத்துமாறு பெய்ஜிங் தனது விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. போயிங் ஜெட் விமானங்களை நேரடியாக வாங்குவதற்குப் பதிலாக அவற்றைக் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்துமாறு சீன நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *