டிரம்ப் செய்தது பெரிய தவறு-உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர்.

இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டிரம்ப் செய்தது பெரிய தவறு.அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரஷ்யாவிற்கு புதிய பலத்தை கொடுக்கும். ரஷ்யா இதனால் நம்பிக்கையாக இருக்கும். இதனால் உக்ரைனுக்கும், நேட்டோ நாடுகளுக்கும்தான் ஆபத்து காத்திருக்கு.

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே என்னிடம் பேசும் முன் டிரம்ப் புடினிடம் பேசியது தவறு. இப்போது என்னை சந்திக்கும் முன்பாக புடினை டிரம்ப் சந்திப்பது பெரிய தவறு, என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் எச்சரித்துள்ளார்.

இந்த போன் கால் சிறப்பாக இருந்தது.நீண்ட நேரம் பேசினோம்.பயனுள்ளதாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போன் கால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்ததாகவும், "இருவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று புடினும் டிரம்பும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இருவரும் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பேசியது இதில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர், ஏஐ தொழில்நுட்பம், மத்திய கிழக்கில் நடக்கும் பிரச்சனைகள் என்று பல விஷயங்கள் பற்றி இதில் பேசி உள்ளனர். இரண்டு தரப்பும் உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரண்டு தரப்பும் இந்த போன் காலில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்கான முயற்சிகளை செய்தது.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில்.. உக்ரைனுக்கு வழங்கிய அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. நிதி தொடர்பாக வழங்கிய எல்லா உதவிகளையும் நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்று உள்ள டிரம்ப் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்; நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன். அதோடு நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம், என்றெல்லாம் கூறினார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும்.அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

உக்ரைன் நேட்டோவுடன் இப்போது இணையாது.அடுத்த 20 வருடங்களுக்கு இவர்கள் இணைய மாட்டார்கள்.அதனால் இப்போது போர் செய்ய வேண்டாம். நேட்டோ படையில் உக்ரைன் 20 வருடங்களுக்கு இணையாத வகையில் நிறுத்தி வைக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் ஆலோசனை வழங்கினார். அதோடு உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்கிய அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. நிதி தொடர்பாக வழங்கிய எல்லா உதவிகளையும் நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *