டிரம்ப்-க்கு 2வது தோல்வி-USAID ஊழியர்கள் கொண்டாட்டம்.!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது முறையாக பதவிக்கு திரும்பிய பிறகு, முதல் நாளில் கையெழுத்தி முக்கியமான உத்தரவுகளில் அமெரிக்க உதவி நிறுவனம் (USAID) நிதியுதவிகள் அனைத்தும் 90 நாள் மொத்தமாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த 90 நாளில் அமெரிக்க மக்களின் பணம் USAID அமைப்பால் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவித்தார்.இந்த இடைப்பட்ட காலத்தில் டிரம்ப் தனது சொந்த சமுக வலைத்தளமான ட்ரூத் சோசியல் பக்கத்தில் USAID செய்யும் செலவுகள் அனைத்தும் வேஸ்ட், விவரிக்க முடியாமல் உள்ளது, இதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் பதிவிட்டு இருந்தார். டிரம்ப்-ன் முதல் நாள் கையெழுத்து USAID அமைப்பை பெரும் பிரச்சனைக்கு தள்ளியுள்ளது மட்டும் அல்லாமல் பலரை திக்குமுக்காட வைத்துள்ளது.

அமெரிக்க உதவி நிறுவனம் (USAID) -ன் பணியாளர்களை கடுமையாக பாதிக்கும் வகையில் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு தற்போது அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மாவட்ட நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.டிரம்ப்-ன் உத்தரவுகளின்படி, ஆயிரக்கணக்கான USAID பணியாளர்கள் வேலையில் இருந்து கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் ஏஜென்சி ஊழியர்கள் 30 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுகள் USAID பணியாளர்களை மிகவும் மோசமாக பாதிப்பதாகவும், கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகவும் அரசு ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தில் வாதிட்டன. நீதிபதி இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு USAID ஊழியர்களை விடுமுறையில் செல்லவும், 30 நாட்களுக்குள் நாடு திரும்ப அழைக்கும் உத்தரவுகளுக்கு தற்காலிக தடை விதித்தார்.

இருப்பினும், நீதிபதி USAID-ன் நிதியை முடக்கும் தனித்தனி நிர்வாக நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடையை விதிக்க மறுத்துவிட்டார்.USAID அமைப்பு 60 ஆண்டுகாலமாக 60 நாடுகளில் பல்வேறு உதவி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் உலகம் முழுவதும் செய்து வருகிறது, டிரம்ப்-ன் இந்த ஒரு உத்தரவால் மொத்தமும் முடங்கியுள்ளன. மேலும், ஒரு உயர் அரசு அதிகாரி, USAID-க்கு எதிராக இதை முற்றிலுமாக மூடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார், இது மேலும் சிக்கலாக்கியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு சேவை சங்கம் மற்றும் அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை, காங்கிரசின் அங்கீகாரம் இல்லாமல் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் இந்த USAID நிறுவனத்தை அரசு முடக்க முடியாது என்று வாதிடுகின்றன. இந்த வாதத்தை ஜனநாயக கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர்.டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து செலவுகளை குறைப்பதில் தீவிரமாக உள்ளார், USAID அமைப்பு வருடத்திற்கு 65-75 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் இந்த அமைப்பில் 10000 பேர் பணியாற்றி வருகின்றனர்.செலவுகளை குறைப்பதற்காகவே டிரம்ப், எலான் மஸ்க் தலைமையிலான DOGE என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு தான் USAID-க்கு ஒதுக்கப்படும் நிதி எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டு டிரம்ப்-டம் தகவலை பரிமாறி வருகிறது.இதன் வாயிலாகவே தற்போது டிரம்ப் அரசு USAID அமைப்புக்கான நிதி ஒதுக்கீடுகளையும், திட்டங்களையும் அகற்றி வருகிறது. மேலும், USAID-ன் கணினி சர்வர்கள் அகற்றப்பட்டதாக ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *