சேவல் சண்டையில் ஈடுபட்ட 11 பேர் கைது!

top-news

மே 24,

தடை செய்யப்பட்ட சட்டவிரோதப் பந்தய விளையாட்டான சோவல் சண்டையில் ஈடுபட்ட இந்தோனேசிய ஆடவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்ப்டையில் கோலா திரங்கானுவில் உள்ள Kampung Atas Tol பகுதியில் இச்சோதனையை மேற்கொண்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் திரங்கானு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்து சேவல் சண்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட 4 சேவல்களும், RM 5,823 ரொக்கப் பணமும், சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார், கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் இந்தோனேசிய ஆடவர் என்றும் மேலும் மூவர் உள்ளூர் ஆடவர்கள் என்றும் அனைவரும் 32 முதல் 56 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார்.

Sebelas individu termasuk seorang warga Indonesia ditahan polis kerana terlibat dalam aktiviti haram sabung ayam di Kampung Atas Tol, Kuala Terengganu. Polis merampas empat ayam sabung, wang tunai RM5,823 dan peralatan berkaitan. Semua suspek ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *