கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? - கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸ் அமெரிக்க ஊடகங்களில் அதிகமாக கவனம் ஈர்த்து வருகிறார். அதே நேரம் ட்ரம்ப் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பையும் சந்தித்துவருகிறார்.

ட்ரம்ப் கட்சியின் ஆதரவாளரான JD Vance என்னும் அரசியல்வாதி கமலா ஹாரிஸை பிள்ளையில்லா பூனைப்பெண் என விமர்சித்திருந்ததைக் குறித்த செய்திகள் வெளியாக, அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் குரல் கொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், கமலா ஹரிஸை இனரீதியாகவே விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.அவரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் தன்னை எப்போதும் இந்திய வம்சாவளியினர் என கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால், இப்போது திடீரென தான் கருப்பினத்தவர் என அறியப்பட விரும்புகிறார் அவர். எனக்குத் தெரியவில்லை, கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என கேள்வி எழுப்பியுள்ளார் ட்ரம்ப்.

கமலாவின் தந்தை ஜமைக்கா நாட்டவர், தாய் இந்தியர். இருவருமே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.இந்நிலையில், கமலா ஹரிஸைக் குறித்து ட்ரம்ப் கூறியுள்ள கருத்துக்கள் அவமதிக்கும் வகையிலானவை என்று கூறியுள்ள வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர், ட்ரம்பின் விமர்சனங்களுகு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

விமர்சிப்பவர் முன்னாள் ஜனாதிபதியாகவே இருந்தாலும் சரி, கமலா ஹரிஸ் அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி அவருக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *