மார்க் ஜுக்கர் பெர்க் மத நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனையா?

- Muthu Kumar
- 13 Feb, 2025
பாகிஸ்தானில், மெட்டா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO), மார்க் ஜுக்கர் பெர்க் மத நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, தனக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை ஏற்பட்டது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது: பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. பேஸ்புக்கில் மத நிந்தனை செய்யும் வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர ஒருவர் முயன்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால், அந்த வழக்கை பற்றி நான் கவலைப்படவில்லை. உலகில் பல்வேறு நாடுகளில் கருத்து சுதந்திரம் என்பதற்கு வெவ்வேறான மதிப்பீடுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
அதோபோல், அந்த அரசாங்கங்கள் எங்களை முடக்கவும், சிறையில் அடைக்கவும் நினைக்கின்றனர். இதனை சிலர் சரி என கருதுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் என்றும் அந்த விழாவில் மார்க் ஜுக்கர்பெர்க் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *