டீசல் பரோட்டா என்பது நவீன உணவா? நச்சு உணவா?

top-news
FREE WEBSITE AD

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்று ஒட்டுமொத்த சமையல் உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

நாமெல்லாம் விரும்பி சாப்பிடும் ரொட்டி சனாய் எனும் பரோட்டாவை வித்தியாசமான முறையில் செய்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளார் ஒருவர். சண்டிகரில் உள்ள தாபா ஒன்றிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த காணொளி. இதில் வழக்கமாக பரோட்டா செய்வதற்கு பயன்படுத்தப்படும் நெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக பார்ப்பதற்கு டீசல் போல் இருக்கும் எண்ணெய் பயன்படுத்துகிறார் அந்த நபர்.

காணொளியை பதிவு செய்யும் நபர்  ஆர்வமிகுதியில் நீங்கள் பயன்படுத்துவது என்ன எண்ணெய் என கேட்க, அதற்கு சமையல் செய்பவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் அமைதியான முறையில் இதுதான் டீசல் பரோட்டா எனக் கூறுகிறார். ரொட்டி மாவை பிசையும் அவர், அதனுள் உருளைக்கிழங்கை பிசைந்து சேர்க்கிறார்.

பின் சூடேற்றபட்ட பாத்திரத்தில் வைத்து வழக்கம்போல் சமைக்கிறார். ஆனால் பரோட்டாவிற்கு இவர் பயன்படுத்தும் ஆயில் தான் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. இதை அவர் 'டீசல்' என்றுதான் அழைக்கிறார். அவர் டீசல் என்று கூறினாலும் உண்மையிலேயே அது பார்ப்பதற்கு டீசல் கலந்த சமையல் எண்ணெயா அல்லது பலமுறை சமையலுக்கு பயன்படுத்தபட்ட எண்ணெயா என்பது சமையல் செய்பவருக்கு மட்டுமே தெரியும்.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட இந்த காணொளிக்கு தற்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *