தீயில் கருகிய பள்ளிக்கூடம்! – சிலாங்கூர்!

top-news

ஜுலை 10,


சிலாங்கூர் காஜாங்கிலுள்ள இடைநிலைப்பள்ளியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியின் மூன்றாவது மாடி முழுமையாகத் தீயில் கருகியதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். இன்று அதிகாலை 1.18 மணியளவில் பள்ளியின் பாதுகாவலரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 16 தீயணைப்பு அதிகாரிகளுடன் அதிகாலை 1.25 மணிக்குப் பாதிக்கப்பட்ட இடைநிலைப்பள்ளிக்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

காஜாங்கில் உள்ள SMK கூட்டரசு இடைநிலைப்பள்ளியின் மூன்றாவது மாடியில் தீ வேகமாகப் பரவியதாகவும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள பள்ளியின் அலுவலகம் உட்பட வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகளின் துரிதமான செயல்பாட்டால் தீ 30 நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். இத்தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் பாதுகாவலர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் பரிசோதித்து வருவதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.


Sebuah sekolah menengah di Kajang, Selangor terbakar awal pagi tadi, menyebabkan tingkat tiga bangunan termasuk pejabat dan bilik darjah musnah. Tindakan pantas 16 anggota bomba berjaya mengawal api dalam 30 minit tanpa kemalangan jiwa

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *