1000 லிட்டர் கடத்தல் டீசல் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 28 Apr, 2025
ஏப்ரல் 28,
மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குக் கடத்தப்படவிருந்த 1000 லிட்டர் மானிய விலையிலான டீசல் எண்ணெய்கள் கொண்ட பீப்பாய்களை எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் பறிமுதல் செய்தனர். கிளாந்தானில் உள்ள RANTAU PANJANG பகுதியில் ரோந்து பணியில் இருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய வாகனத்தை அடையாளம் கண்டதாகவும் வெளிநாட்டினர் என நம்பப்படும் குழு வாகனத்திலிருந்து பீப்பாய்களைப் படகிற்கு மாற்றுவதைக் கண்ட நிலையில் சம்மந்தப்பட்ட குழுவினர் படகில் தப்பி தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பீப்பாய்களைச் சோதனையிட்டதில் 1000 லிட்டர் மானிய விலையிலான டீசல் இருந்ததைக் கண்டறிந்ததாகவும் அதன் மதிப்பு சுமார் RM 2880.00 ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்குச் சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்து டீசல்கள் நிறைந்த பீப்பாய்கள் RANTAU PANJANG எல்லை பாதுகாப்பு ஆணையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய ஆடவர்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Pasukan gerakan Am, Bridged Tenggara merampas 1000 liter diesel subsidi yang cuba diseludup dari Malaysia ke Thailand di Rantau Panjang. Suspek melarikan diri menaiki bot ke Thailand, manakala diesel dirampas dianggarkan bernilai RM2880.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *