முன்னோர்களின் தியாகத்தை மறவாதீர்! – துணை அமைச்சர் செனட்டர் K.Saraswathy

top-news

பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களை இணைக்கும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு தியாகம் செய்துள்ள அனைத்து தரப்பினரின் தியாகங்கள் பாராட்டக்கூடிய ஒன்று என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை கட்டுமான வரலாறு கடந்த 1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கியதாக இன்று இங்கு கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை வரலாறு மீதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.

பெக்கான் ஜெல்லி, கிளாந்தான் மற்றும் கம்போங் கோலா ரூம்,கெரிக்,பேராக்கை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் உத்தேசமாகும்.ஆனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ம் காரணங்களால் அது நிறைவேறவில்லை.இருப்பினும் அப்போதைய துணை பிரதமர் காலஞ்சென்ற துன் அப்துல் ரசாக்கின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக கடந்த 1971 ஆம் ஆண்டில் இந்த நெடுஞ்சாலையின் கட்டுமான பணி தொடங்கியதுபல மேடு பள்ளங்கள், மலைகள் கடந்து கடுமையான சூழலில் இதன் கட்டுமான பணி தொடர்ந்தது. மேலும் பூமியின் சூழல், சுற்றுச்சூழல், தொழில் திறன் குறைந்த ஊழியர்கள் மற்றும் தென் தாய்லாந்தில் கம்யூஸ்டுகளின் மிரட்டல் போன்ற சவால்கள் எதிர்நோக்கப்பட்டன.

இந்த நெடுஞ்சாலை கட்டுமான பணியை தோல்வி அடையச் செய்ய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் கீழறுப்பு செயல் போன்ற மிரட்டல்களும் எதிர்நோக்கப்பட்டன.இந்த நெடுஞ்சாலை கட்டுமான பணியின் போது மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் கீழறுப்பு செயல் மற்றும் தாக்குதலால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது80 கட்டுமான இயந்திரங்கள் கீழறுப்பு செய்யப்பட்டது. மேலும் 63 இயந்திரங்கள் அழிக்கப்பட்டது. இதன் காரணமாக வெ 10 லட்சம் நஷ்டத்தை அரசாங்கம் எதிர்நோக்கியது27 ஆகஸ்டு 1974 ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் 3 பொதுப்பணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

பிறகு 12 நவம்பர் 1981 கம்யூனிஸ்டு நடத்திய மற்றொரு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்பல இடையூறுகளின் காரணமாக இந்த நெடுஞ்சாலை கட்டி முடிக்க 12 ஆண்டுகள் தேவைப்பட்டது216 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை 1 ஜூலை 1982 நிறைவு பெற்றது.இது சுதந்திர மாதம் என்பதால் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு தங்களை அர்ப்பணித்த தரப்பினரை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த தரப்பினரை நினைவில் கொள்ள தேசிய காப்பகம் நமக்கு அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளது பாராட்டக்கூடிய ஒன்று என செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *