ஆசியானின் பெண்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதல் மையம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 25-

கோலாலம்பூரில் ஆசியானின் பெண்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதல் மையத்தை மலேசியா நிறுவவுள்ளது.
இது உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு அவ்வட்டாரம் முழுவதிலும் குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும்.

இது நாட்டின் ஆசியான் 2025 தலைமைத்துவத்திற்கான கருப்பொருளான “உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு" ஏற்ப உள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அசிஸ் கூறினார்.சுருக்கமாகக் கூறினால், ஆசியானின் 2025 தலைவராக, தென்கிழக்கு ஆசியாவின் கொள்கைகளின் மையத்தில் உள்ளடக்கிய வளர்ச்சியையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

இன்று ஆசியான் உச்சநிலை மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் பெண்கள் பொருளாதார உச்சநிலை மாநாட்டில் அவர் அவ்வாறு கூறினார். ஆசியான் பெண்கள் தொழில்முனைவோர் வலையமைப்பு, போன்ற தளங்கள் மூலம் வட்டாரம் முழுவதும் உள்ள பெண்கள், இளைஞர் தொழில்முனைவோரை ஆசியான் ஆதரிப்பதை தெங்கு ஸஃப்ருல் சுட்டிக்காட்டினார்.

Malaysia akan tubuhkan pusat pertama ASEAN bagi memperkasa ekonomi wanita, selaras dengan tema kepimpinan ASEAN 2025 iaitu "Inklusiviti dan Kelestarian", serta menyokong usahawan wanita dan belia menerusi pelbagai jaringan dan inisiatif serantau.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *